சென்னை: தமிழ்நாட்டில் ரூ. 10.59 கோடியில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைக்கப்படம என சட்டப்பேரவை மானிய கோரிக்கையில்,  அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.  இதில்,  துறைவாரியான அமைச்சர்கள், தங்களது மானிய கோரிக்கைகளை வெளியிட்டு வரும் நிலையில், நேற்றைய நாள் (25.06.24), பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்துப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மானியக் கோரிக்கையை வெளியிட்டார். அதன்படி,  ரூ. 10.59 கோடியில் விடுதிகள் மேலாண்மை தகவல் அமைக்கப்படுவதாக அறிவித்து உள்ளர்.

1. LPG மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் பித்தளை தேய்ப்பு பெட்டிகளுக்கு பதிலாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் 1200 பயனாளிகளுக்கு வழங்க, ரூ. 73 இலட்சம் ஒதுக்கீடு!

2.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1351 விடுதிகளில் 658 விடுதிகளுக்கு, DTH இணைப்புகளுடன் LED தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 693 விடுதிகளுக்கும் DTH இணைப்புகளுடன் LED தொலைக்காட்சி பெட்டிகள் வழங்க ரூ. 2 கோடியே 93 இலட்சத்து 83 ஆயிரம் ஒதுக்கீடு.

3. சீர்மரபினர் நல வாரிய உதவி திட்டங்கள் செயலாக்கத்தை எளிமையாக்கவும், இதர புதிப்பித்தல், பதிவு செய்தல், உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகளை துரிதப்படுத்தவும், இணைய சேவை, ரூ. 15 இலட்சத்தில் செயல்படுத்தப்படும்.

4. சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய பெரு நகரங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் தரமான உணவு வழங்க, ரூ. 2.69 கோடியில் பொது சமையலறை அமைக்கப்படும்.

5.  முக அங்கீகார செயலி (Face Authentication App), கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல் மூலம், “விடுதிகள் மேலாண்மை தகவல் அமைப்பு,” ரூ. 10.59 கோடியில் செயல்படுத்தப்படும்.

6. கல்லூரி விடுதி சமயலறை பயன்பாட்டிற்காக, ரூ. 1.45 கோடியில் புதிய பாத்திரங்கள்! 290 பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளின் சமயலறை பயன்பாட்டிற்காக புதிய பாத்திரங்கள், ரூ. 1.45 கோடி செலவில் வழங்கப்படும்.

7. 692 பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி விடுதிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக ரூ. 1.38 கோடி செலவில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

8.  500 மாணவியர் பயன்பெறும் வகையில் 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ. 2.83 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

9.  1,400 கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், 19 பள்ளி விடுதிகள், கல்லூரி விடுதிகளாக, ரூ. 1.96 கோடி செலவில் நிலை உயர்த்தப்படும்.

10. பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்காக, NEET, JEE உள்ளிட்ட நுழைவுத்தேர்வு வினாத்தாள் வங்கி நூல்கள், ரூ. 22 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.