சென்னை: சட்டப்பேரவையில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை அமைச்சர் ரகுபதி இன்று தாக்கல் செய்தார். இதன்மூலம் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தராக முதல்வரே செயல்படுவார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (5-ம் தேதி) போக்குவரத்து, சுற்றுலா, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.
தற்போது, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் இருக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக முதல்வரே நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.