சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு- 17ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி,  5 நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது  என குறிப்பிட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில்  3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற  அமைச்சர் பொன்முடி, உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பு நிறுத்தம் காரணமாக, மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை துவக்கப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டோர் விளக்கத்தை கேட்காமல் வழக்கை மாற்றியதற்கு குற்றம்சாட்டப்பட்டவர் பொறுப்பாகமாட்டார் என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதாவது, அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா ? என்றார்.

ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என கூறிய  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் பொன்முடி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து – வரும் 21 ல் தண்டனை விவரம் அறிவிப்பு! அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிமன்றம் அதிரடி

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…