டில்லி:
தனியார் நிறுவன பாதுகாவலர்கள் சிறந்த ‘ஆயுத’ பயிற்சிக்காக ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்து பயிற்சி பெற வேண்டும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (FICCI) ஏற்பாடு செய்திருந்த “வேலைகளை உருவாக்குதல் – புதிய இந்தியாவைப் பாதுகாத்தல்”. என்ற தனியார் பாதுகாப்புத் தொழில் மாநாடு (பி.எஸ்.ஐ.சி – 2019ல் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அவர் அலுவலல் நிமித்தமாக வரமுடியாத நிலையில், அவருக்கு பதிலாக பியூஸ் கோயல் கலந்து கொண்டார்.
அங்கு சிறப்புரை ஆற்றிய கோயல், “இந்த காவலர்கள் எவ்வளவு சிறப்பாக பயிற்சி பெற்றிருக் கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை, அவர்களிடம் உள்ள உபகர ணங்கள் மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
நன்கு பயிற்சி பெற்ற கைகளில் இருந்தால் ஒரு தடி இருந்தால்கூட அது சிறந்த ஆயுதமாக இருக்க முடியும் என்று கூறியவர், “உலகின் பல இடங்களில், தடியடி தானே நிறைய நம்பிக் கையை அளிக்கிறது … ஒரு தடியடி அதிசயங்களைச் செய்ய முடியும் என்று கூறியவர், “எங்கள் ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம்) ஷாகாக்களில் நாம் பெறும் பயிற்சி தனியார் பாதுகாப்புக் காவலர்களுக்கு கிடைக்கும் பயிற்சியை விட மிக உயர்ந்தது.”
தனியார் பாதுகாவலர்கள், ஷாகாக்களில் (ஆர்எஸ்எஸ் முகாம்) சேருங்கள் என்று கூறியவர், ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் வழங்கப்படும் ஆயுதப் பயிற்சி சிறப்பானது, தனியார் ஏஜென்சிகளால் பாதுகாப்புக் காவலர்களுக்கு வழங்கப்பட்டதை விட மிக உயர்ந்தது என்றும், இதை கட்டாயப்படுத்த வில்லை என்று தெளிவுபடுத்தியவர், அதில் சேரும் காவலர்கள் ஏதாவது நல்லதைக் கற்றுக்கொள்வார்கள். அவர்களின் மன மற்றும் உடல் திறன்கள் அங்கு மேம்படுத்தப் படும் என்று கூறியவர், நீங்கள் செய்யும் வேலைக்கு பயிற்சி எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்த மட்டுமே முயற்சிக்கிறேன் என்று அவர் கூறினார்.
பியூஸ் கோயலில் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.