சென்னை: கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டாக குறைக்கும் மசோதாவை  அமைச்சர் பெரியசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதை கலைக்கும் வகையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் வகையில் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில்  இன்று மசோதாவை தாக்கல் செய்தார். அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத்திருத்த்தின்படி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 5ல் இருந்து 3 ஆண்டாக குறைக்கப்படுகிறது.

இந்த மசோதா நிறைவேறியதும், தற்போது பதவியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தினரின் பதவிகள் காலியாகி விடும்.

இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.