சென்னை: ‘உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்’ என்ற பெயரில், தமிழக சட்டப்பேரவையில், 2024/25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். முன்னதாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது தமிழக பட்ஜெட்டோடு சேர்த்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மூன்றாவது ஆண்டாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு, வேளாண் துறைக்கு 38 ஆயிரத்து 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வழக்கமான நடைமுறைகளுடன் சபை கூடியதும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகளுடன் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.