சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் வெளியிட்டுள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்களிலும் சென்னை, கே.கே.நகர் இஎஸ்ஐசி மரு்த்துவக் கல்லூரியில்  125 இடங்களிலும், 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3050 இடங்களிலும்  அரசு ஒதுக்கீட்டு இ டங்களில் சேர்க்கை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 848 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர சுயநிதிமருத்துவக் கல்லூரிகளில் 1290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படும்.

நடப்பு 2022-2023ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்களை சேர்க்கை ஆன்லைன் மூலம் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை  நடைபெற்றது. அதன்படி மருத்துவர் படிப்புக்கு மொத்தம் 40,264 விண்ணப்பங்கள்  வந்தன.  அதில், அரசு கல்லூரிகளில் சேர 25,059 விண்ணப்பங்களும், தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 15,205 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களில் 5022 பேர் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். 85 பேர் மாற்றுத் திறனாளிகள், படைவீரர் பிரிவினர் 355 பேர், விளையாட்டுப் பிரிவினர் 306 பேர் உள்ளனர். தமிழத்தில் இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 455 பேர் சேர்க்கப்படு வார்கள். பல் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 114 பேர் சேர்க்கப்படுவார்கள். பல் மருத்துவப் படிப்பை பொருத்தவரையில் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்  1960 இடங்களும்  மாநில அரசு இடங்களாக வைக்கப்பட்டு சேர்க்கை நடக்கிறது.

அவற்றில் 605இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். இந்நிலையில், இன்று காலை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவ மனை வளாகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியருக்குரிய ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காலை 9மணி அளவில்  வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் 19-ம் தேதி நேரடி முறையில் தொடங்கும் என்றும், மொத்தமுள்ள இடங்களில் 848 இடங்கள் தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக, மருத்துவம் மற்றும் பல்மருத்துவத்துக்கான 7377 இடங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் என்றார்.

மருத்துவ வருந்தாய்வு 19ந்தேதி தொடங்கும் என்றவர், அக்டோபர் 20ந்தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டின்படி 558 இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றவர் 7.5 சதவிகித இடஒதுகீட்டில் சேருவதற்கு 2695 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இதில் எம்.பி.பி.எஸ்படிப்பில் 454 இடங்களும் பல் மருத்துவ படிப்பில் 104 இடங்களும் ஒதுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங்   ஆன்லைன் மூலம் நடக்கும் என அறிவித்தார்.