சென்னை: கத்திக்குத்தால் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார். அப்போது மருத்துவர், தாம் நலமுடன் இருப்பதாக கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தங்களது கேள்விகளுக்கு முறையான  பதில் தெரிவிக்காததாலும் ஆத்திர மடைந்த நோயாளியின் மகன் புற்றுநோய் சிறப்பு  மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தினார்.  இதையடுத்து மருத்துவர் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார். தற்போது அவரது உடல் தேறி உள்ளது. அவர் மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உரையாடி வருகிறார்.

இந்த நிலையில் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  `இன்று காலை மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்’. அவர் நலமுடன் உள்ளார். `மருத்துவர் பாலாஜி எழுந்து அமர்ந்து நன்றாக பேசினார்” . இன்று மதியத்திற்கு பின் மருத்துவர் பாலாஜி ஐசியூவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படுவார்”  என கூறினார்.