சென்னை: “தமிழகத்தில் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சு. உடன்  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர், துணைமேயர் உள்பட பலர்  கலந்துகொண்டார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட்டது. முதலில் முதியோர்கள், முன்களப் பணியாளர்கள் என தொடங்கப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதுவரை  15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்றுமுதல்  நாடு முழுவதும் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் புதிய தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. அதற்கு தேவையான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி மாநிலங்களுக்கு அனப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து,  தமிழகத்தில் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில்,  சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சென்னை மாநகர மேயர் முன்னிலையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகம் முழுவதும் 21.21 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், மார்ச் 25 முதல் தமிழகத்தில் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும்,  தமிழகத்தில் 95% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 70% பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறினாபர்.

மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் மருத்துவ இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என்றும் குறிப்பிட்டார்.