சென்னை: மறைந்த வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

வேளாண் அமைச்சராக இருந்த துரைக்கண்ணு, கொரோனா பாதிப்பால் சிகிக்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது உடல் சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந் நிலையில், உயர்கல்வி அமைச்சர் கேபி அன்பழகனிடம் கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் அதற்கான துறை ஒதுக்கீட்டை செய்தார்.

இதையடுத்து, கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை மற்றும் வேளாண்மை றை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]