சென்னை
அமைச்சர் கே என் நேரு கோவையில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்/
இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது அமைச்சர் கே என் நேரு,
“கோவை மாவட்டத்திற்கு 380 எம்எல்டி தண்ணீர் கொடுத்தாலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.
குறிப்பாக ஒரு சில பகுதிகளுக்கு 3 நாட்களுக்கும், 7 நாட்களுக்கும் ஒரு முறை குடிநீர் வருவதாக கூறி உள்ளார்கள்.
எனவே, கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மூலம் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்”
என்று அறிவித்துள்ளார். ,