திருச்சி

மைச்சர் கே என்நேரு திமுகவை தன் எதிரி என சொன்ன விஜய்க்கு பதில் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்,

“2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க.”

என்று கூறியிருந்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் நடைபெற்ற முதல்-அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்தரங்கத்தில்,

“நேற்று வரை நடிகராக இருந்தவர், அரசியலுக்கு வந்து பொதுமக்களை ஒருமுறை கூட சந்திக்காதவர், கூட்டரங்கத்தில் கூட்டத்தை கூட்டிக் கொண்டு எங்களுக்கு தி.மு.க.தான் முக்கிய எதிரி என்று கூறுகிறார். அவரையும் தி.மு.க. சந்திக்கும். 2026-ல் மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார்.

முதல்வர் அமைதியாக இருந்தாலும், அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். மத்தியில் இருப்பவர்கள் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

மறுபுறம், பா.ஜ.க.வுடன் சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் இப்போது ஓடிச் சென்று அவர்களுடன் சேர்கிறார்கள். அனைவரையும் சந்திக்க தி.மு.க.வினர் ஆயத்தமாக இருக்க வேண்டும்.”

என்று  கூறியுள்ளார்.