கோவில்பட்டி:
காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மன்னிப்பு கேட்க கோரியும் கோவில்பட்டியில் உள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுக்கையிட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கைது செய்யப்பட்டனர்.