சென்னை,
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கணக்கில் வீக்காக இருப்பதாக நிதி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியதாரர் குறை தீர்ப்பு முகாமில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழக சட்டசபையை கூட்டினால் அரசு பெரும்பான்மை இழந்து விடுமோ என்று ஆளுங்கட்சியினர் பயப்படுவதாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இரண்டுவிடுமோ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், தங்களுக்கு 123 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும் கூறினார்.