ரஜினி, கமல் இணைந்து வந்தாலும் சிங்கம் சிங்கிளா எதிர்க்கும்! அமைச்சர் ஜெயக்குமார்

Must read

சென்னை:

ஜினி, கமல் சேர்ந்தாலும் கவலையில்லை  என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில், அதிமுக அவர்களை சிங்கிளாக எதிர்த்து நிற்கும் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என ரஜினி கூறியதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் பரபரப்பாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில்,  கமலின் ‘கமல் 60’ பாராட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், ‘ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவது தமிழகத்துக்கு நல்லது’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, மக்கள் நீதி மய்ய்ம தலைவர் கமல்ஹாசன், தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்திருந்தார்.

இந்j நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் ரஜினி, “தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்” என அதிரடியாகத் தெரிவித்தார்.

இதுகுறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,  ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் சரி, தனித்து இருந்தாலும் சரி அதைபற்றியெல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. கருணாநிதி போன்ற ஜாம்பவான்களைக் கண்ட கட்சி அதிமுக. ரஜினி, கமல் போன்றவர்கள் எல்ல்லோரும் எங்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே.

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமலோடு சேர்ந்து விஜய்யும் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்த்து நிற்கும். 2021-ம் ஆண்டிலும்  நிச்சயம் அதிமுக ஆட்சிதான் அமையும்” என்று கூலாக கூறினார்.

More articles

Latest article