டில்லி
கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் பல் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி இறுதிக் கட்டச் சோதனையில் உள்ளது. அனைத்து நாடுகளுக்கும் இடையில் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் கடும் போட்டி நிலவுகிறது
இந்தியாவில் 3 வகை தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஒரு இணைய முனையத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து தொடங்கப்பட்ட அந்த முனையத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவின் முதல் கொரோன தடுப்பூசி வரும் 2021 ஆம் வருடம் முதல் காலாண்டில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தடுப்பூசி சோதனைகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும் விதிகளுக்கு உட்பட்டுச் சோதிக்கப்படுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.