சென்னை
திடீர் உடல்நாக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைசர் துரைம்ருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டு வீடு திரும்பினார்..
கடந்த 10 ஆம் தேதி நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 13 தொகுதிகளிலும் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றறு வெற்றி விவரங்கள் வெளிவந்தன.
பீகாரில் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இமாசல பிரதேசத்தில் 2 இடங்களில் காங்கிரசும், பாஜக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
உத்தரகாண்டில் 2 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி மற்றும். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வெற்றிபெற்றதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சென்னை அண்ணா அறிவாலயம் வந்திருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவசர சிகிச்சைப்பிரிவில் அமைச்சர் துரைமுருகனை அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.