ஸ்ரீவில்லிபுத்துார்:

”சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை, அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஜெ., சிலை தத்ரூபமாக ஜெயலலிதா போலவே உள்ளது,” என, பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

கடந்த 24ம் தேதி அதிமுகவின் தலைமையகத்தில் ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டது. அது ஜெயலலிதா போலவே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வரும் போது, ஜெயலலிதா எப்படி கையசைத்து வருவாரோ, அதுபோல் தத்ரூபமாக அந்த சிலை இருக்கிறது. அ.தி.மு.க., ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்தால், ஆலமரம் போல, அஸ்திவாரம் போட்டு, ‘ஸ்டிராங்காக’ அதிமுக இருக்கிறது. இதிலிருந்து ஒரு செங்கல்லை கூட, யாரும் உருவ முடியாது.
பழுத்த மரமான எங்களை பற்றி பேசித்தான் பலர், ‘பப்ளிசிட்டி’ பெறுகிறார்கள்.

ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., இருவருமே ஒன்றாக இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகின்றனர். அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் வேலையை மீடியாக்கள் செய்கிறது. ஆனாலும், அவர்கள் ஒன்றுபட்டு வழி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.