கன்யாகுமரி
ரெயில்வே இணை அமைச்சர் ராஜேன் கோஹன் நேற்று கன்யாகுமரியில் ”ரெயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” எனக் கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் தற்போது பயணக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அரசு பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் பலர் தற்போது ரெயிலில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் குறைந்து வருகிறது.
நாகர்கோவில் – மதுரை அகல ரெயில் பாதை பணிகளுக்கு அடிக்கல் நாட்ட ரெயில்வே இணைஅமைச்சர் ராஜேன் கோஹன் தற்போது கன்யாகுமரி வந்துள்ளார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயர்வினால் தற்போது ரெயில் பயணத்தை மக்கள் மேற்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் பயன்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரெயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என கோஹன் கூறினார்.