சென்னை

த்திய அரசு தமிழகத்துக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளதாக அமைச்சர் சக்ரபாணி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  குறிப்பாக குடியாத்தம் பகுதியில் தட்டுப்பாடு அதிக அளவில் காணப்படுகிறது.  இந்தத் தட்டுப்பாட்டைக் குறைக்கத் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

இன்று இது குறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி செய்தியாளர்களிடம், 

”தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டது.  கட்ந்த 2011 ஆம் வருடம் தமிழகத்துக்கு மத்திய அரசு 8500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்தது. 

அது 2022 ஆம் வருடம் 4500 கிலோ லிட்டராகக் குறைக்கப்பட்டு தற்போது 2500 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது.  இவ்வாறு மண்ணெண்ணெய் அளவு மூன்றில் ஒரு பங்காகக் குரைக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடு நிலை வருகிறது” 

என்று தெரிவித்துள்ளார்.