சென்னை
அமைச்சர் சிவசங்கர் தலமையில் கிளாம்பாக்கத்தில் கூடுதல் பேர்ந்துகள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து லையமான்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது ஏற்கனவே உள்ள சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கிளாம்பாக்கத்தில் வெகு நேரமாக காத்திருந்தும் எந்த பேந்ருந்தும் வராததால் பொறுமையை இழந்து பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையொட்டி தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து மேலாளர்களுடன் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.அமைச்சரின் இந்த ஆலோசனை மூலம் கிளாம்பாக்கத்திற்கு கூடுதல் பஸ் வசதி அமைத்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.