சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி சொத்துகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், அனிதா ராதாகிருஷ்ணனும் இடம் பெற்றிருந்தார். அவர் பதவியை பயன்படுத்தி, முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசரண நடைபெற்று வந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்து, தற்போது தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ரூ. 6.5 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.