சென்னை: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு மார்ச் 26ந்தியும், 12-ம் வகுப்புக்கு மார்ச் 1ந்தியும் பொதுத் தேர்வு தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 10ம் தேதி தேர்வு முடிவுகளும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 6ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முடிவடைகிறது. 11ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு ஆனது பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைகிறது. 12ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் ஆனது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி வேதியியல், கணக்கியல், நிலவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல மார்ச் 15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு திறன்கள் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மின்னியல் பொறியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது) ஆகிய பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன.
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், அடிப்படை சிவில் பொறியியல், அடிப்படை ஆட்டோமொபைல் பொறியியல், அடிப்படை மெக்கானிக்கல் பொறியியல், டெக்ஸ்டைல் டெக்னாலஜி அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 ஆம் வரை தேதி வரை நடைபெறுகிறது. 2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது.