சென்னை: தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10ம்வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட சில நிமிடங்களில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வுமுடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வு எழுதிய 8,07,098 பேரில் 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றனர். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.43% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. அதில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே இன்று (மே 16) வெளியானது.
பிளஸ் 1 தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,07,098 இதில் 7,43,232 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.09% ஆகும். தேர்வு எழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.13% தேர்ச்சி ஆகும். தேர்வு எழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.70% தேர்ச்சி ஆகும்.
மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.92% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 9,205 மாற்றுத் திறனாளிகளில் 8,460 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.91% ஆகும்.
தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 90.40% ஆகும்.
தேர்வு எழுதிய 4,326 தனித்தேர்வர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 21.96% ஆகும்.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் பிளஸ் 1 தேர்வு எழுதிய மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7558
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 2,042 100%
தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 282
பள்ளி மேலாண்மை வாரியாக தேர்ச்சி அரசுப் பள்ளிகள் – 87.37% அரசு உதவிபெறும் பள்ளிகள் – 93.09% தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.03% இருபாலர் பள்ளிகள் – 92.40% பெண்கள் பள்ளிகள் – 95.02% ஆண்கள் பள்ளிகள் – 83.66%
ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் 11.36% கூடுதலாகத் தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன.
இருபாலர் பயிலும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8.74% கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பாடப் பிரிவு வாரியாக தேர்ச்சி அறிவியல் பாடப் பிரிவுகள் – 95.08% வணிகவியல் பாடப் பிரிவு – 87.33% கலைப் பிரிவுகள் – 77.94% தொழிற்பாடப் பிரிவுகள் – 78.31% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
அரியலூர் – 97.76%
ஈரோடு – 96.97%
விருதுநகர் – 96.23%
கோயம்புத்தூர் – 95.77%
தூத்துக்குடி – 95.07%