சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம், வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் தேர்தலில் போட்டியிடுவோர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யும்படி அறிவித்து விருப்ப மனுக்களையும் பெற்று வருகின்றன.
அதன்படி, திமுகவில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 6-ந்தேதி மாலை 5 மணி வரை விருப்பமனுக்களை வழங்கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதைடுத்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக அண்ணா அறிவாலய வளாகத்தில் அதிகாலை முதலே தொண்டர்கள் திரள ஆரம்பித்து, மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை சமர்ப்பிக்கும் சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பமனு அளித்தார். இதே தொகுதியில் கடந்த 2 முறை போட்டியிட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]