லண்டன்:

சுற்றுச்சூழலை மாசு படுத்தும்,  வேதாந்தா நிறுவனம் பங்குசந்தையில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று  பிரபல பொருளாதார நிபுணர் வலியுறுத்தி உள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணரும்,  இங்கிலாந்தின் நிழல்  நிதி மந்தி என்று அழைக்கப்படுப வரான ஜான் மெக்டோனல், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை முடப்பட வேண்டும் என்றும், பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனம் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சுற்றுச்சூலை மாசுபடுத்துவதாக  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக வேதாந்தா நிறுவனம் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

இந்த எதிர்ப்பாளர்களின் “படுகொலை” நடவடிக்கைக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, லண்டன் பங்கு வர்த்தகத்தில் இருந்து வேதாந்தா நிறுவனம் நீக்கப்பட வேண்டும். “இந்த முரட்டு நிறுவனத்திலிருந்து லண்டனின் நிதியச் சந்தைகளுக்கு ஏற்படும் சேதத்தை தடுக்க முடியும்” என்றும்  ஜான் மெக்டோனல் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கு லண்டன் பங்குச் சந்தை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்திய பில்லியனர் அனில் அகர்வால் கட்டுப்பாட்டில் உள்ள வேதாந்தாவின் நிறுவனத்தின் பங்குகள் தூத்துக்குடி சம்பவத்திற்கு பிறகு  உலகளாவிய சந்தையில் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கடுமையாக வீழ்ச்சியுற்றுள்ளன. நேற்றும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.