டெல்லி: குறைந்தபட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூற உள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மத்திய பிரதேச மாநில விவசாயிகளிடையே பிரதமா் மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டு உள்ள சீர்திருத்தங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. விவசாயிகளின் போராட்டம் மூலம் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு இருக்கின்றனர்.
வேளாண் சட்டங்களை பற்றிய தவறான தகவல்களை பரப்புவதை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்.
எதிர்க்கட்சிகளுக்கு வேளாண் சட்டங்கள் மீது எல்லாம் பிரச்னை இல்லை. அவர்களுக்கு மோடியுடன் தான் பிரச்னை என்று கூறினார்.