ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொற்று உச்சத்தில் உள்ளது.
ராஜஸ்தானில் ஒட்டு மொத்த பாதிப்பு நான்கரை லட்சத்தை எட்ட உள்ளது. கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு ராஜஸ்தானில் ஏப்ரல் 22ம் தேதி முதல் வருகிற மே 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார். மக்களுடன் நேரிடையாக தொடர்புள்ள இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதலில் போட்டுவிட்டால் மற்றவர்களுக்கு கொரோனா பரவாது என்றும் கூறினார்.