பூஞ்ச்

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

                                                                    மாதிரி புகைப்படம்

காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள புஞ்ச் மாவட்டத்தில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் பறந்துக் கொண்டு இருந்தது.  இதில் வடக்குராணுவ கமாண்டரான லெப்டினெண்ட் ஜெனரல் ரன்பீர் சிங்,  இரு பைலட்டுகள் மற்றும் 4 வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்துள்ளனர்.

திடீரென ஹெலிகாப்டரில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது அதையொட்டி ஹெலிகாப்டர் அவசர அவசராமகா தரையிறக்கப்பட்டுள்ளது.   இதனால் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் பயணம் செய்த அனைவரும் நலமாக உள்ளதாகவும் ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ உயர் அதிகாரி பயணம் செய்த ஹெலிகாப்டரில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு பரபரப்பாகி உள்ளது.  மேலும் இது நாசவேலைகளின் பின்னணியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.  இது குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]