சென்னை:
பொதுமக்களுக்கு ஆதரவாக பேசினால் போராளி, தீவிரவாதியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார் இஐஏ வீடியோ வெளியிட்ட பத்மபிரியா. இதன் காரணமாக தாம் கடுமையான சொற்களால் தாக்கப்பட்டதால், அந்த வீடியோவை நீக்கி விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020” என்று வரைவு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான விவரம், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படப்போகும் அழிவு குறித்து, பொதுமக்கள் யாரும் இதுவரை அறிந்திருக்க வில்லை.
இந்த நிலையில், பத்மபிரியா எனப்படும் சென்னை தமிழச்சி வெளியிட்ட சுற்றுச்சூழல் சட்ட முன்வடிவு தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரும் விழித்துக்கொள்ள இஐஏ என்பது என்ன என்று விவாதிக்கத்தொடங்கி உள்ளார்கள். அரசியல் கட்சிகளும், இதை கையிலெடுத்து மத்திய அரசை வசைபாடி வருகின்றனர். இது ஆளும்கட்சியினருக்கு கடும் எரிச்சலை ஏற்டுத்தி உள்ளது.
இதன் காரணமாக வீடியோ வெளியிட்ட பத்மபிரியாவுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் மனதளவிலும், மிரட்டல் காரணமாகவும் கடுமையாக காயப்படுத்தப்பட்ட நிலையில், தான் வெளியிட்ட இஐஏ தொடர்பான வீடியோவை யுடியூப் சேனலில் இருந்து நீக்கி இருக்கிறார்.
இதுகுறித்து, பத்ம பிரியா ஆவேசமாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், இஐஏ சட்ட முன்வடிவு குறித்து, தான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி உள்ளது. இது சாமானிய மக்களிடம் போய சோர்ந்துள்ளதால், பிரச்சனை ஆயிடுச்சு.
இந்த சட்ட முன்வரைவில், ஆகஸ்டு 11ந்தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. அதனால், அது குறித்து இப்ப விவாதிக்காம எப்போது விவாதிக்கிறது… .
இந்தியாவை சுடுகாடாக மாற்றும் மோடி அரசின் இஐஏ 2020 டிராப்ட்….
சமீபத்திய பற்றிய எனது வீடியோ வெளியிட்டதால், என்னைங்ப பத்தி பல்வேறு அவதுறுகள் தன்மீது வீசப்படுகிறது. இஐஏ பிரச்சினை பத்மபிரியா இல்லை பிரச்சினை இல்லையே, மக்களுக்கான பிரச்சனை, மக்கள் பிரச்சினை குறித்து பேசினால் தவறா?
இது நான் எந்த மாதிரியான ஜனநாயக நாடு நான் கேட்கிறேன், ஏற்கனவே நான் பல்வேறு சமூக பிரச்சினை குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறேன்… அதெல்லாம் வைரலாகவில்லை.. ஆனால், இது வைரலாகி உள்ளது…. அது என் நல்ல நேரமோ கெட்ட நேரமோ அந்த மாதிரி ஆகிடுச்சு அதுக்காக ஒரு பொது மக்கள் தங்கள் கருத்தை முன்வைத்து உரிமை கிடையாதா?
ஒரு தப்பான விஷயம் குறித்து யாரா இருந்தாலும், பொதுமக்கள் யாரா இருந்தாலும் விவசாயத்துக்கு அகைன்ஸ்ட் ஆகும் போது, மக்களோட வாழ்க்கையை அறிந்து, ஏதாவது விஷயம் தான் கொஞ்சம் மாத்தி கொடுங்க என்று கேட்டால் தப்பா, அப்படித்தான் சொல்றவங்கை நீ ஒரு போராளியா, ஒரு தீவிரவாதியா என்று விமர்சிப்பதா?
நாட்டுக்கு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்கள் கண்டிப்பா தேவை ஆனா அதுக்காக இயற்கை வளங்கள் அழிச்சுட்டு நீங்க மட்டும் போய் விட முடியாது . இத சொல்றதுக்கு நான் ஒரு பெரிய ஆளா இருக்கணும் இல்ல ஓட்டு போட்ட எல்லா ஜனங்களும் சொல்லலாம்…
இதுபோன்ற முன்வரைவுகளை மாநில மொழிகளை மாற்றிக் கொடுங்கள் படிக்கட்டும் அதற்கு மேலும் கொஞ்சம் டைம் கொடுங்க அப்பத்தான் நாங்க சாதாரண மக்களுக்கு புரியும்…
தனது வீடியோ குறித்து பல்வேறு அவதூறாக கருத்துக்களை பதிவிட்டு மிட்டல் விடுக்கப்படு வதால், தான் அந்தவீடியோவை அகற்றி விட்டேன் என்றும் கூறியுள்ளார்.