மதுரை
மதுரையில் புத்தக திருவிழாவி பக்தி பாட ஒலிபரப்பியது குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் அரசு மாணவ மாணவிகள் அழைத்துவரப்பட்டனர். அப்போது பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேடைகளில் நடத்தப்பட்டது.
அவற்றில் ஒன்றாக ‘அங்கே இடி முழங்குது’ என்ற கருப்பசாமி பாடல் ஒலிக்கப்பட்டு கருப்பசாமி வேடமிட்ட ஒருவர் ஆடி வந்தார். இப்பாடல் ஒலிக்க ஒலிக்க அங்கிருந்த மாணவிகள் சிலர் சாமியாடத் தொடங்கினர். அவர்களை சுற்றி இருந்த மற்ற மாணவிகளும் ஆசிரியர்களும் சாமியாடிய மாணவிகளை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாமல் தவித்தனர்.
தற்போது மாணவிகள் சாமியாடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களில் சில மாணவிகள் மயங்கி விழுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள், ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவிகள் முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில் அமர வைத்து ஆசுவாசப்படுத்தினர். அரசு புத்தக திருவிழாவில், பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அதில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம்,
“புத்தக திருவிழாவில் கிராமிய பாடல் மட்டுமே ஒலிபரப்பானது. இதில் மத சாயமோ, சாதி சாயமோ இல்லை. எனவே, தவறான தகவலை பரப்ப வேண்டாம். புத்தக திருவிழாவில் நடந்தது முழுக்க முழுக்க கிராமிய கலை நிகழ்ச்சி மட்டுமே. மதுரை என்பது சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கக் கூடிய இடம்”
என்று தெரிவித்துள்ளார்.