லக்னோ:
த்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், புலம்பெயர் தொழிலாளர் கள் மாநிலத்துக்குள் நுழைய  தடை விதிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து,  புலம்பெயர்ந்தோர், மாநில எல்லைகளில் அரசு வைத்துள்ள  தடுப்புகளை உடைத்துவிட்டு   உள்ளே ஓடோடி வருகிறார்கள்.  இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய  மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போட்டுள்ளது. இதனால் தொழில் இழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முனைப்பு காட்டி வருகிறார்கள்.
இவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யாததைத் தொடர்ந்து, அவர்கள் நடந்தும், சைசக்கிள் மற்றும் இருச்சகர வாகனங்களிலும் தங்களது குடும்பத்தினரோடு மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறார்கள். பலர் சரக்குகள் ஏற்றி வரும் லாரிகளிலும் செல்கிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் பல இடங்களில் விபத்துக்களில் சிக்கி பலியாகும் சோகங்களும் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கால் நடை, சைக்கிள் அல்லது லாரிகளில் வருவதை நிறுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டிருந்தார், மேலும் மக்கள் மற்றும் பேருந்துகளுக்கு தங்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்ல உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில எல்லைப்பகுதிகள் நேற்று பிற்பகல் முதல் தடுப்புகளைக் கொண்டு சீல் வைக்கப்பட்டது.
ஆனால் மதுரா உட்பட பல இடங்களில், புலம்பெயர்ந்தோர் தடுப்புகளை கவிழ்த்துவிட்டு உள்ளே நுழைந்தனர். அந்த இடத்திலிருந்து வந்த அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புலம்பெயர்ந்தோரின் கூட்டத்தைக் காண்பிக்கின்றன.
ஆயிரக்கணக்கானோர் அரசின் எச்சரிக்கையை மீறி வாகனங்களிலும், நடந்தும், எந்தவித சமூக விலகள் குறித்தும் கண்டுகொள்ளாமல் வேகமாக நுழைந்து வருகின்றனர்.
அதுபோல, எல்லைப் மாவட்டமான பிரயாகராஜில் இதே நிலை இருந்தது, அங்கு மத்திய பிரதேசத்திலிருந்து குடியேறியவர்கள் ரேவா வழியாக  வந்துகொண்டிருக்கிறார்கள்
“நேற்று சுமார் 15 அல்லது 20,000 பேர் உ.பி. மாநிலத்துக்கு திடீரென திரும்பி வந்திருப்பார்கள் என்றும், . நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பிரத்யேக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், பலருக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், மதுராவின் மாவட்ட நீதிபதி  சர்வேஷ் ராம் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.