டெல்லி:  மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று  (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்து உள்ளது. இதில் கலந்துகொள்ள இயலாது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க இன்று  (மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு  மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகப் பாதிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் கடும் பாதிப்புகளை எதிா்கொண்டுள்ளன. தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யும் இந்தியா, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் மிகுந்த இடா்ப்பாட்டை சந்தித்துள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வால் தொழில்-வா்த்தக துறையினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், மேற்காசிய போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமையும் (மார்ச் 23ந்தேதி), மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் (மார்ச் 24ந்தேதி) பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். அப்போது, ‘மேற்காசிய போரால் எழுந்துள்ள உலகளாவிய கடினமான சூழல் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தைப் போல தற்போதைய சூழலையும் ஒன்றுபட்டு எதிா்கொள்ள ஒட்டுமொத்த தேசமும் தயாராக வேண்டும். சாமானிய குடும்பங்களுக்கு கூடியவரை சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய பிரச்னையில் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து ஒருமித்த குரல் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒலிக்க வேண்டும்.  மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கவும், மோதலை நிறுத்தவும் இந்தியா தொடா்ந்து முயற்சிக்கிறது’ என்றாா்.

அதேநேரம், ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததற்காக, பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சித்தது. ‘பிரதமரின் தற்பெருமை, கோழைத்தனம், பாரபட்சம் நிறைந்த வெற்று உரை’ என்றும் அக்கட்சி சாடியது.

இந்தச் சூழலில், மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க  இன்று புதன்கிழமை (மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பங்கேற்பாா் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் பங்கேற்கவில்லை என்று வறப்படுகிறது.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில்  செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘கேரளத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலாது’ என்றாா்.

[youtube-feed feed=1]