மதுரை: மதமாற வற்புறுத்தயதால் தற்கொலை செய்தாக கூறப்பட்ட மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அதை ரத்து செய்யக்கோரி மைக்கேல்பட்டி பள்ளி வார்டன் சகாயமேரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து மாணவி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அதாவத, சுமார் 17 வயது எழை சிறுமி ஒருவர் மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியான துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து, அப்பள்ளியின் விடுதியில் தங்கினார். அவரது ஏழ்மை காரணமாக, விடுதியில் சமையல் வேலை உள்பட பல்வேறு பணிகளை செய்து வந்து,அங்கே தங்கியிருந்து படித்து வந்தார்.
அவர் கடந்த 2022 ஜன.9 ல் விடுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். விடுதி அலுவலர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், இது குறித்துஅவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உங்களை மகளை உடனே வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறினர்.
வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி உடல்நிலை சரியில்லாமல் மாணவி தொடர்ந்து வாந்தி எடுத்தார். பின்னர்,. தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் மாணவி 2022 ஜன.19 ல் இறந்தார். திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்தனர். விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது.
இதற்கிடையில், தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தியதாக மாணவி கூறியதாக வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. அதுபோல, மாணவி இறப்பதற்கு முன்பு பள்ளி அருகே உள்ள விடுதியில் அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதால் மனஉளைச்சலில் தற்கொலை செய்ததாக திருக்காட்டுபள்ளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் வார்டன் சகாயமேரி (வயது 62) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை உயர்நீதி மன்றத்தில் மனு செய்தார். விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி 2022 ஜன.31 ல் தனிநீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. தொடர்ந்து விசாரணை அறிக்கை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரிய மைக்கேல் பட்டி விடுதி வார்டன் சகாயமேரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ,’மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. சிபிஐ குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும்,’என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனு மீதான விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரணையை செப்.18 க்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்திவந்தனர். மாணவி படித்த விடுதி மற்றும் பள்ளியில் விசாரணை நடத்தினர். மேலும், . விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாகவும் மற்றும் பள்ளிச் சுற்றுப்புற பகுதிகளையும் சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு, விடுதி தரப்பிலும் விசாரித்தனர். மேலும், இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் படித்த மாணவிகள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.