மாநாடு படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் வரும் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், சிம்புவின் பட வெளியீட்டுக்கு சிலர் நெருக்கடி நடிகருமான டி. ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தர் இருவரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி. ராஜேந்தர், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீதும், தமிழ்த்திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி என்பவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்பு, டி. ராஜேந்தர், உஷா டி. ராஜேந்தர் ஆகியோர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ படம் வெளியீடு தள்ளிப்போனதற்கான காரணத்தைக் கூறிய நிலையில், அவர்கள் என் மீது தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளனர். நடிகர் சிம்பு பொய்யான உறுதி அளித்து ஏமாற்றி என்னை நஷ்டத்தில் தள்ளிவிட்டார். இதனால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.