சென்னை:   டிசம்பர்  24ந்தேதி  எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, கடற்கரை  காமராஜர் சாலையில்  உள்ள  மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செய்கின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வரும் 24ந்தேதி மலர் அஞ்சலியும், உறுதிமொழி ஏற்பும் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த அதிமுக  நிறுவனரும்,  முன்​னாள் முதல்​வருமான எம்​ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தவுள்​ளனர்.

இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அதி​முக​ நிறு​வனத் தலை​வர் எம்​ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார். அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை 10 மணிக்​கு,சென்​னை, மெரினா கடற்​கரை​யில் உள்ள எம்​ஜிஆர் நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்​று,மலர் வளை​யம் வைத்​து, மலர்​தூவி மரி​யாதை செலுத்த உள்​ளார்.

இந்​நிகழ்ச்​சிகளில் அனை​வரும் கலந்​து​கொள்ள வேண்​டும்”என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வரும் டிச.24-ம் தேதி எம்​ஜிஆர் நினைவு தினத்தை முன்​னிட்​டு, சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள எம்​ஜிஆர் நினை​விடத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம், மூத்த தலை​வர் பண்​ருட்டி ராமச்​சந்​திரன் ஆகியோர் மலர் வளை​யம் வைத்​து, மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்த உள்​ளனர்”.

இவ்வாறு கூறப்​பட்​டுள்​ளது.

மேலும் சசிகலா, டிடிவி தினகரன் உள்​ளிட்​டோரும்​ எம்ஜிஆர் நினைவிடத்தில் மரி​யாதை செலுத்​த உள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது.

[youtube-feed feed=1]