மதுரை,

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் இன்று தொடங்குகிறது.

இன்று மாலை நடைபெற இருக்கும் விழாவில் சபாநாயகர் தனபால் தலைமை வகிக்க இருக்கிறார்.

இந்த விழாவில் பங்கேற்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள்,  கட்சி நிர்வாகிகள் மதுரையில் குழுமி உள்ளனர்.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்த விழாவில்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனால், மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஜனவரி வரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை 32 மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மதுரையில் இன்று தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடத்தப்பட வுள்ளது.

விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் மதுரை சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் அருகே தோரண வாயிலுடன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை  செய்தித்துறை இணை இயக்குநா் , மக்கள் தொடா்பு லுவவா்கள் விழா ஏற்பாடுகளை மும்முரமாக செய்துள்ளனா்.

விழாவில் பங்குபெறும் முதல்வரை வரவேற்க பள்ளிக்குழந்தைகளை தயார் செய்துள்ளனர். அதில் பல குழந்தைகள் எம்ஜிஆா் வேடமணிந்தும்,  பெண்கள் முளைப்பாரியோடு முதல்வரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே எம்.ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜான்சி ராணி பூங்கா பகுதியில்  செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கடந்த 27ந்தேதி திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், திரைத் துறையில் பணியாற்றியது முதல் அரசியலில் முதல்வராகப் பதவியேற்றது வரை பல்வேறு புகைப்படங்கள், முதல்வராக இருந்த காலத்தில் அவரது சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள், போப் ஆண்டவர் மற்றும் தேசிய தலைவர்கள் பலருடன் சந்திப்பு ஆகியவற்றை விளக்கும் அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன