சூட்-பூட்-கொள்ளை அரசாங்கம் ஏழைகளின் வலியை புரிந்து கொள்ளுமா? ராகுல்காந்தி

Must read

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மக்களுக்கு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் படி (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA))  கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,  சூட்-பூட்-கொள்ளை அரசாங்கம் ஏழைகளின் வலியை புரிந்து கொள்ளுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து வகையான தொழில்நிறுவனங்களும் முடங்கியதால், அதை நம்பி வாழ்ந்து வந்த கோடிக்கணக்கானோல் வேலையின்றி, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல நிறுவனங்கள் மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளது. இருந்தால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்னும் பணிக்கு திரும்ப முடியாத சூழலே நிலவி வருகிறது.

இந்த நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 100 நாள் (MNREGA)  திட்டத்தின்படி வேலை வழங்க வண்டும் என்று மத்தியஅரசை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், , 100 நாள் வேலை திட்டத்தில் ஏழைகளுக்கு வேலை வழங்க வேண்டியது கட்டாயம். குறைந்தபட்ச வருவாய் அளிக்கும் NYAY திட்டத்தில் வேலை வழங்கினால் இந்திய பொருளாதாரமும் உயரும்.

சூட்-பூட்-கொள்ளை அரசாங்கம் ஏழைகளின் வலியை புரிந்து கொள்ளுமா? என்று பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article