மெக்சிகோ:

மெக்சிகோ அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.

மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரமான இரண்டாவது அலை நேரத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதைப்பற்றி 67 வயதான மெக்சிகன் அதிபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் எனக்கு சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது, ஆனால் எப்போதும் போலவே நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பை போலவே மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லொபெஃஜ் ஆப்ரடரும், கொரோனா வைரசை தான் கையாண்ட விதத்திற்காக விமர்சிக்கப்பட்டார். தற்போது மெக்சிகோ பயன்படுத்தும் ஒரே தடுப்பூசி ஃபைசர் மட்டுமே, மெக்சிகோவில் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த நாடு போராடி வருவதால் தனியார் நிறுவனங்களும் நேரடியாக ஃபைசர் மருந்துகளை வாங்க அனுமதிக்கப்படுகிறது என மெக்சிகன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.