துபாய்:

சிங்கப்பூரின் ஜெபல் அலி பகுதியில் குரு நானக் சிங் தர்பாருக்கு பக்கத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் விரிவாக்கமாகும் என துபாயின் சமூக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

சிந்தி குரு தர்பார் கோவில் நாட்டின் பழமையான ஹிந்து கோவில்களில் ஒன்றாகும், இது கடந்த 1950 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோவில் அறங்காவலர்களில் ஒருவரான ராஜூ ஷரோஃப் இதைப்பற்றி தெரிவித்துள்ளதாவது: இந்த கோவில் துபாய் தலைவர்களின் திறந்த மனப்பான்மையின் சான்றாகும், 1950 ஆம் ஆண்டு ஒரே ஒரு அறையாக திறக்கப்பட்ட இந்த கோவில், தற்போது 70,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, இது துபாய் தலைவர்களின் பெருந்தன்மையை காட்டுகின்றது, அவர்கள் இல்லை எனில் தற்போது இது சாத்தியமாகி இருக்காது என ராஜூ ஷரோஃப் தெரிவித்துள்ளார்.

கோவிலின் கட்டிடக்கலை ஒரு தனித்துவமான அரேபிய தோற்றத்தைக் கொண்டிருக்கும் எனவும், இந்த கோவிலில் பதினோரு ஹிந்து தெய்வங்கள் இருக்கும் எனவும் ராஜூ ஷரோஃப் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலுக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது எனவும், இந்த கோவில் அடுத்த வருடம் தீபாவளி அன்று திறக்கப்படும் எனவும் துபாய் ஊடகம் தெரிவித்துள்ளது.