சேலம்: 120அடியை கொண்ட மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்னும் சில நாட்களில் அணை மீண்டும்  நிரப்ப வாய்ப்பு இருப்பதாக அதிகாரி கள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது  மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 32,240 ஆயிரம் கன அடியாக  உள்ளது. அணையின் நீர் மட்டம் 111 அடியை தாண்டி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜுலை மாதம் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், மீண்டும் முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மேலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு சின்னாறு தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும்  மழை காரணமாக  காவிரியில் வரும் தண்ணீர் அளவு மேலும்  அதிகரித்து வருகிறது.

 நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) வினாடிக்கு 29,021 கன அடியாக அதிகரித்தது. இன்று (புதன்கிழமை)  காலை நீர்வரத்து வினாடிக்கு 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.   அதேவேளையில்  அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 111.39 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை (புதன்கிழமை ) 113.21 அடியாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.72 அடி உயர்ந்துள்ளது. அணை நீர் இருப்பு 83.05 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஒருவார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.