சேலம்:  120அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று  118 அடியை தாண்டி உள்ளது.  இன்றும் ஒரிரு நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால்,   மூன்றாவது முறையாக மேட்டுர் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.  120 அடி கொண்ட மேட்டூர் அணைக்கு தற்போது நீர் வரத்து குறைந்துள்ள நிலையிலும், நீர் மட்டம் 118 அடியை தாண்டிது உள்ளது.

 நேற்று முன்-தினம், அணைக்கு நீர்வரத்து  6,384 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று, 6,198 கனஅடியாக சற்று சரிந்தது. அப்போது அணை நீர்மட்டம், 117.57 அடியாகவும், நீர் இருப்பு, 89.64 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. பாசனத்துக்கு, 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன நீர் தேவை குறைந்த நிலையில் அணைக்கு வரும் நீரின் பெரும் பகுதி சேமிக்கப்படுகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இன்று காலை   நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக சற்று உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7460 கனஅடியில் இருந்து 7148 கனஅடியாக குறைத்துள்ளது.  அணையில் இருந்து,  டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்க்கு 300 கனஅடியும் நீரும் வெளியேற்றப்படுகிறது.

நீர் வரத்து இதே நிலை நீடித்தால் அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை நடப்பாண்டு மேட்டூர் அணை நிரம்பி உள்ள நிலையில்,  3வது முறையாக இன்னும் ஒருசில நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக  அதிகாரிகளும், விவசாயிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.