சேலம்:
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவை எட்டியது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 644 கனஅடி வீதம் வந்த தண்ணீர், நேற்று மாலை வினாடிக்கு 33 ஆயிரத்து 420 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.74 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.