மேட்டூர்:

ர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டி உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.34 அடி எட்டி உள்ளது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேட்டூர் தற்போது முழு கொள்ளவை எட்டியது 43வது முறை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக  அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகள் முழுக்கொள்ளவை எட்டி உள்ளன. இதைத்தொடர்து அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று  நீர்வரத்து 50,000 கன அடி அளவுக்கு வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது வினாடிக்கு யில் 85,000 கன அடியாக அதிகரித்து உள்ளது.  தமிழக – கர்நாடக எல்லை யான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரிக் கரையோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அணை நிரம்பி உள்ளதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.