சேலம்: மேட்டூர் அணை, இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு 6வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் விவசாயத்திற்கு வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணை மீண்டும் மீண்டும் நிரம்பி வருவது விவசாயிகளிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின், அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் போன்ற அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது. இடையில் சற்று குறைந்த நிலையில், மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரில் திறந்து விடப்படும் நீரின் அளவை கர்நாடகா அதிகரித்து உள்ளது. இதனால், ஒகனேக்கல் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மேட்டூர் அணைக்கு ஆகஸ்டு 31ந்தேதி அன்று மாலை வினாடிக்கு 29 ஆயிரத்து 360 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் செப்டம்பர் 31 ஆயிரத்து 854 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அஒளிக் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து இதுபோல நீர் வரத்து இருந்தால் அணை இரவு முழு கொள்அளவை எட்டும் என கூறிய அதிகாரிகள், அணை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முற்பகல் 119.23 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில், நேற்று மதியம் நீர் வரத்து 36 ஆயிரத்து 985 கனஅடியாக அதிகரித்து. இதனால் நேற்று இரவு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன்மூலம் மேட்டூர் அணை நடப்பாண்டில் 6-வது முறையாக நிரம்பி உள்ளது. இது இதுவரை இல்லாதது என்று சிலாகித்த விவசாயிகள் சிலாகித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அணை நிரம்பியதால், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை அணையில் 92.645 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.