கடந்த சில நாட்களாக காவிரியில் வரும் தண்ணீர் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 21ம் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து , நேற்று மாலை நிலவரப்படி 99.62 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளது. தற்போதைய நிலையில் (மதியம் 2.30 மணி நிலவரம்) அணையின் நீர்மட்டம், 100.02 அடியாக உள்ளது. நீர் இருப்பு 64.866/93.47 (டிஎம்சி) ஆக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து 27,077 கன அடியாகவும் உள்ளது காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 20,000 கன அடி நீரும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 850 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.