மேட்டூர்

ந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டாம் முறையாக நிரம்பி உள்ளது

1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை125 அடி உயரம் கொண்டதாகும்.  இந்த அணையில் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், டெல்டா மாவட்ட விவசாயத்தின் ஜீவாதாரமாக உள்ளது. இங்கு கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர், சுரங்க மின்நிலையம் உள்ளிட்ட 3 இடங்கள் வாயிலாக வெளியேற்றப்படுகிறது.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. சமீபத்தில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதல் பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது. த்ற்போது கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து வரும் தொடர் நீர்வரத்து காரணமாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியது.

என்வே சுரங்க மின் நிலையம் மூலம் 21,500 கனஅடியும், உபரி நீர் கால்வாய் வழியாக வினாடிக்கு 4,500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.