சென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தொற்று பரவலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந் நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம். வெளியிட் உள்ளது. அதன்படி, இனி சென்னையில் காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ஊரடங்கு காரணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.