சென்னை:
கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளளது.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.தொடர் மழை பெய்துவருவதால், மின் வினியோகம் தடைபட்டுள்ள நிலையில், சாலைகளில் சிக்னல்கள் இயங்காத காரணத்தினால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர், மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் வர தாமதமாவதால், மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில்நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் கனமழையால் மெட்ரோ ரயில் சேவை 1 மணிநேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே இயக்கப்படும் ரயில்கள், மழை காரணமாக பயணிகளின் தேவை கருதி நள்ளிரவு 12 மணி வரை இயக்கம். சாலைகளில் மழைநீர் தேங்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மெட்ரோ சேவை நீட்டிக்கப்ட்டுள்ளது. மேலும், பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு பாதுகாப்பான இடங்களை அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிவதை கடைபிடிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.