சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோரயில் சேவை நவம்பர் 2ந்தேதி அன்று இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது. அதன்படி, நவராத்திரி விழாவை கொண்டாடி விட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக இரவு 9.30 மணி வரை இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் முடக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இந்த மாதம் தொடக்கத்தில், மீண்டும் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைந்த நேரத்திலேயே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு நேரம் நீட்டிக்கப்பட்டது. மேலும், அவ்வப்போது மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் வழக்கமாக காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயிலை காலை 5.30 மணிவரை இயக்கப்பட்டு வருகிறது.

[youtube-feed feed=1]